தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராய்லட்சுமி.இவர் லட்சுமிராய் என்ற தன்னுடைய பெயரை ராய்லட்சுமி என்று சமீபத்தில் மாற்றிக் கொண்டார்.
இவர் தமிழில் நடிகர் விக்ராந்துடன் இணைந்து கற்க கசடற என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 15. அதைத் தொடர்ந்து மங்காத்தா, காஞ்சனா போன்ற பல திரைப்படங்களில் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ராய்லட்சுமி விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஒரு வெளிநாட்டு விஸ்கி விளம்பரத்தில் நடித்துள்ளார். மேலும் இது பற்றிய விளக்கத்தையும் ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
Also read: இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் இயக்குனர்.. அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்
மேலும் தன் கையில் விஸ்கி பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். ஜப்பானில் உருவாக்கப்பட்ட இந்த மதுபானத்தை பற்றிய தகவல்களையும், அதை எப்படி குடிப்பது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவருக்கு அந்த கம்பெனியில் இருந்து மாதம் நான்கு விஸ்கி பாட்டில்கள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராய் லட்சுமி கையில் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை நன்றாக கலாய்த்து வருகின்றனர். இதுபோன்றே இலியானா, ஹன்சிகா மோத்வானி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் வெளிநாட்டு மது பானத்தை விளம்பரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
1 Comment