உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் லெமன் டீ.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

நம்மில் காபி, டீ பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிலர் காபி என்றால் போதும் உலகத்தையே மறந்து விடுவார்கள். அந்த காபியை அண்டா நிறைய வைத்துக்கொண்டு குடிக்கும் சில பெரியவர்களும் இருக்கின்றார்கள்.

ஒருவருக்கு காபி எதனால் இவ்வளவு பிடிக்கிறது என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில் புத்துணர்ச்சியாக இருக்கிறது என்பதுதான். ஆனால் உண்மையில் இந்த காபியால் பித்தம் போன்ற சில பிரச்சனைகளும் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது. ஆனாலும் பலரும் இந்த காபியை விரும்பி குடிக்கின்றனர்.

தற்போது இருக்கும் இளைய தலைமுறையினர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் கிரீன் டீ, லெமன் டீ போன்ற பழக்கத்திற்கு மாறிவிட்டனர். சொல்லப்போனால் இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். இந்த லெமன் டீ நம் உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை அளிப்பதற்கு உதவுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் இந்த லெமன் டீயை குடிப்பதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் இந்த லெமன் டீ குடிப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும்.

Also read: உடலுக்கு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் இளநீர்.. கோடைக்கால ஸ்பெஷல்!

பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழம் மிகவும் நல்லது. அதை டீயாக தயாரித்து பருகினால் இன்னும் பயனளிக்கும். அந்த வகையில் இந்த லெமன் டீ உடல் எடையை குறைக்கவும், கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இப்படி நம் உடலுக்கு சுறுசுறுப்பையும், புத்துணர்வையும் தரும் இந்த லெமன் டீ யை எப்படி தயாரிப்பது என்று இப்போது காண்போம்.

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சிறிதளவு டீத்தூளை கலக்க வேண்டும். இந்த கலவை நன்றாக கொதித்த உடன் சிறிது எலுமிச்சை பழச்சாற்றை அதில் கலந்து பின்னர் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலக்க வேண்டும்.

இப்பொழுது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் லெமன் டீ சூப்பராக தயாராகிவிட்டது. இந்த டீயை நாம் காலை வேளையில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. ஆரம்பத்தில் இதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

ஆனால் தொடர்ந்து சில நாட்கள் குடித்துவர அதன் பிறகு வேறு எந்த டீயையும் நமக்கு அருந்த பிடிக்காது. அந்த அளவுக்கு இது சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. மேலும் இந்த லெமன் டீ நம் தோலை பளபளப்பாக்கவும் உதவுகிறது.

Also read: தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

அதனால் முடிந்தவரை காபி, டீ போன்றவற்றை தவிர்த்து விட்டு இப்படி ஆரோக்கியமான லெமன் டீ அருந்துவது நல்லது. இதை நம் குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தால் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

Comments are closed.