ஆரோக்கியம் 

தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

இயற்கை நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான விஷயங்களை கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தேன் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொருளாகும்.

இந்த தேன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் மூலம் ஏராளமான நோய்கள் குணமாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த தேன் ஒரு அருமருந்தாக இருக்கிறது. இதில் 70 வகையான விட்டமின்கள் இருக்கின்றன.

இந்த தேனை நாம் வாங்கும் போது கலப்படம் இல்லாத சுத்த தேன் தானா என்று சரி பார்த்து வாங்க வேண்டும். அப்பொழுதுதான் நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணங்கள் கிடைக்கும். பொதுவாக இந்த தேன் மலைப்பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது.

இதில் அதிக மருத்துவ குணம் இருப்பதால் சில சித்த மருந்துகளுடன் இணைந்து கொடுக்கும் போது நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது. இதன் மூலம் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இங்கு காண்போம்.

Also read: ஆரோக்கியமான குதிரைவாலி கிச்சடி செய்வது எப்படி.. இதில் இவ்வளவு நன்மைகளா இருக்கிறது?

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த தேனை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து விடுபட முடியும். மேலும் இந்த தேன் செரிமான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது.

குழந்தைகளுக்கு தினந்தோறும் இந்த தேனை சிறிதளவு கொடுத்து வந்தால் அவர்களுக்கு உடல் நல்ல வலு பெரும். மேலும் அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வராது.

கண்பார்வை பிரச்சனை இருப்பவர்கள் வெங்காய சாற்றுடன் இந்த தேனை கலந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தேனை வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வந்தால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் தீரும்.

பாலில் இந்த தேனை கலந்து சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும். மேலும் இதயத்தின் ரத்த ஓட்டத்திற்கும் இது நல்லது.

மூட்டு வலி இருப்பவர்கள் இந்த தேனை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். இந்த தேனுடன் சிறிதளவு இஞ்சி, பேரிச்சம்பழம் ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Also read: தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க

மேலும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவது நம் உடலுக்கு நிறைய பலன்களை கொடுக்கும். செரிமான கோளாறு, சளி தொந்தரவு போன்ற பிரச்சனைகள் தீரும்.

வெதுவெதுப்பான நீருடன் இந்த தேனை கலந்து சாப்பிட்டு வர உடல் எடை கணிசமாக குறையும். நுரையீரலில் இருக்கும் சளி பிரச்சனைகளும் தீரும்.

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்