இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் இயக்குனர்.. அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அந்த இயக்குனர். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு விருது நிச்சயமாக கிடைக்கும். அதனால் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களுக்கும் ஆர்வம் உண்டு.

ஆனால் கோவக்கார இயக்குனரான இவர் தான் நினைத்த காட்சி சரியாக வரும் வரை நடிகர், நடிகைகளை நன்றாக வேலை வாங்கி விடுவார். இருந்தாலும் அவர் படத்தில் நடித்தால் அந்த நடிகர், நடிகை நிச்சயம் வேற லெவலுக்கு சென்று விடுவார்கள்.

அப்படி இவரால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தற்போது கூட இவர் ஒரு பிரபல நடிகரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடிகருக்கு ஜோடியாக ஒரு இளம் நாயகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: சென்னையில் தனியாக செல்லக்கூடாத இடங்கள்.. சினிமாவை மிஞ்சிய அமானுஷ்யங்கள்

அந்த நடிகையுடன் தான் இயக்குனர் தற்போது ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். சமீபத்தில்தான் இயக்குனர் தன் மனைவியை விவாகரத்துச் செய்து பிரிந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்குள்ளாகவே இயக்குனர் இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் இயக்கி கொண்டிருக்கும் பட ஷூட்டிங்கின்போது சம்பந்தப்பட்ட நடிகருக்கு படப்பிடிப்பு தளத்துக்கு அருகிலேயே ரூம் புக் செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் இயக்குனரும், அந்த நடிகையும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சற்று தொலைவில் தங்கி இருக்கிறார்களாம்.

அங்கிருந்துதான் அவர்கள் தினமும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்கள். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஷூட்டிங் முடிக்கப்படாமல் காலதாமதம் ஆவதாக படப்பிடிப்பு குழுவினர் புலம்பி வருகின்றனர். தற்போது இவர்களுடைய கதை தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.