சாப்பிட்டதும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?.. அப்போ இதை செஞ்சு பாருங்க..

சாப்பிட்டதும் பலருக்கு நெஞ்சரிவு ஏற்படுகிறது. அதுவும் குளிர் காலத்தில் இது அனைவருக்கும் வந்து விடுகிறது.

அதற்கு பல காரணங்கள் உள்ளன முக்கியமாக சொல்லப்படுவது ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஆகும். இந்த அமிலம் தான் நாம் உண்ணும் உணவை செரிமாணம் அடையச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.

வயிற்றுக்குள் உணவு அதிகமாக சென்றதும் வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம், அங்கிருந்து மேலே எழுந்து உணவுக் குழாய்க்குள் வருகிறது. உணவுக் குழாயின் உட்சுவரில் ஏற்படுத்தும் ஒரு விதமான எரிவதைத் தான் நாம் நெஞ்செரிவு அல்லது நெஞ்செரிச்சல் என்கிறோம்.

வயிற்றில் அளவுக்கதிகமாக அமிலம் சுரப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அளவுக்கு மீறி உண்பது, இடைவிடாமல் உண்பது, வேகமாக உண்பது, சரியாக மெல்லமால் உண்பது போன்றவையால் தான் அமிலம் அதிகமாக சுரந்து நெஞ்செரிவை ஏற்படுத்துகிறது.

Also read: உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

குறைந்த அளவு வேலை செய்வது அல்லது ஒரே இடத்தில் அமர்ந்தபடியே வேலை செய்வது போன்றவைகள் நெஞ்செரிச்சல் வர முக்கிய காரணங்கள் ஆகும்.

மன உளைச்சல் கூட ஒரு விதத்தில், வயிற்றில் அமிலத்தை சுரக்க வைக்கும். இதன் காரணமாக நமக்கு நெஞ்செரிவு ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் சில குறிப்பிட்ட வகைகள் கூட வயிற்றில் அமிலம் சுரப்பதை அதிகரிக்கும்.

மது அருந்துவது, புகைப்பது, டீ அல்லது காப்பி குடிப்பது போன்றவற்றாலும் அமிலம் அதிகம் சுரக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு குடலேற்றம் காரணமாக கூட நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் அதிகளவு நெஞ்செரிச்சல் ஏற்படும். இதற்கு காரணம் கருப்பையில் குழந்தை வளருவதால், வயிறு மேல் புறமாக இருந்து அழுதப்படுகிறது.

அதேபோன்று, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் உடற்பருமனாக உள்ளவர்களுக்கும் கூட இந்த நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு காரமான உணவுகளை உட்கொண்டால் நெஞ்செரிவு ஏற்படும்.

நெஞ்செரிச்சலை குணப்படுத்துவதற்கான வழிகள்:

நெல்லிக்கனியை விதை எடுத்துவிட்டு காயவைத்து, பின்பு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பால் அல்லது தண்ணீருடன் நெல்லிக்கனி பொடியை ஒரு தேக்கரண்டி கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் குடித்துவர நெஞ்செரிச்சல் சரியாகும்.

மாதுளை இலைகள் மற்றும் பூக்களை சம அளவில் எடுத்து அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி குடித்து வர நெஞ்செரிவு குணமாகும். சீந்தில் கொடியின் சாறு ஒரு தேக்கரண்டி அளவு பிழிந்து எடுத்து தேனுடன் கலந்து குடித்து வர நெஞ்செரிச்சல் சரியாகும்.

உடனடி தேவையாக இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க நெஞ்செரிச்சல் சரியாகும்.

மேலும் உண்ணும் உணவுகளை அளவறிந்து உண்ண வேண்டும். எளிதில் செரிமானம் அடையும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். பழங்கள் மற்றும் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இருப்பினும் தொடர்ந்து நெஞ்செரிவு இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நல்லது.

Comments are closed.