இட்லி தோசை சாப்பிட்டு போரடிக்குதா.. அப்ப இந்த அடை தோசை செஞ்சு பாருங்க!

அடை என்பது நமது பாரம்பரிய உணவு, கேழ்வரகு அடை, கம்பு அடை, கீரை அடை என்று பல விதங்கள் இருக்கிறது. அதில், நமக்கு ஏற்றார்ப் போல், இப்போது தோசை அடை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரசி – ஒரு கப்
உளுந்து – முக்கால் கப்
கொண்டைக்கடலை – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
துவரம் பருப்பு – அரை கப்
கடலைப் பருப்பு – அரை கப்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
முழு தனியா – 2 மேசைக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் சேர்த்து மூன்று அல்லது நான்கு முறை சுத்தமாக கழுவி எடுக்க வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி அதிகபட்சம் 5 மணி நேரம் வரை ஊறினால் நன்றாக இருக்கும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதே சமயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், சீரகம், கருவேப்பிலை, மல்லித்தழை, முழு தனியா போன்றவற்றை சிறிய பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.

Also read: உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் லெமன் டீ.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

மூன்று மணி நேரத்திற்கு பிறகு,
அரிசி, பருப்பு வகைகள் மற்றும் ஊறவைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தேவைப்பட்டால், சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். நர நர என்றுதான் அரைத்தெடுக்க வேண்டும். மிருதுவாக அரைக்க கூடாது.

அடுத்து, இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவினை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. இரண்டு மணி நேரம் வெளியிலே மூடியிட்டு வைக்க வேண்டும். இப்படி செய்வதன்மூலம் மாவு புளிப்பு தன்மை பெறும்.

அப்படி அவசரம் என்றால் நீங்கள் நீங்கள் மாவு அரைத்ததும் கூட தோசை ஊற்றி சாப்பிடலாம்.

சிறிது உப்புச் சேர்த்து உங்களுக்கு மெலிதாக வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி மொறு மொறுவென சுட்டெத்து சாப்பிடலாம்.

அல்லது அடையாக வேண்டுமென்றால், தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே கைகளால் அல்லது கரண்டியால், சிறிய வடிவில் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும்.

Also read:  வில்லேஜ் ஸ்டைலில் காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி?

நல்லெண்ணெய், நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் தோசை சுட்டு சாப்பிட்டால் மண மணக்கும்…

அளவு சரியாக வரவில்லை என்று நினைப்பவர்கள், பருப்பு வகைகளை மட்டும் ஊறவைத்து அரைத்துக் கொண்டு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்ப் போல் இட்லி மாவினை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

சத்து: பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. அதோடு, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகளும் காணப்படுகிறது.

Comments are closed.