பாகுபலி தாலி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. சென்னையில் எங்கு கிடைக்கும்? என்ன விலை தெரியுமா?

நம்ம சென்னையில் நண்பர்களுடன் சென்று கம்மி விலையில் அதிகமான உணவை சாப்பிட இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களா? பொன்னுசாமி ஹோட்டலிர்க்கு சென்று பாருங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் உணவும் மற்றும் விலையும் இருக்கும்.

சென்னையில் மிகப்பெரியதாய் சாப்பாடு என்றால் அது இந்த பாகுபலி தாலி தான். இந்த பாகுபலி தாலி எங்கு கிடைக்கும் என்று பார்த்தீங்கன்னா, நுங்கம்பாக்கம் ஜெகநாதன் ரோட்டில் பொன்னுசாமி ஹோட்டல் அமைந்துள்ளது.

இந்த ஹோட்டல் பிரபலமானதற்கு முக்கிய காரணம் இந்த பாகுபலி தாலி தான். இங்கு ஒரு பெரிய தட்டு முழுவதும் அதிக வகையான சைவம் மற்றும் அசைவம் சாப்பாடு வைத்து இரண்டு பேர் அதைத் தூக்கி வந்து டேபிளில் வைப்பார்கள்.

அந்தத் தட்டில் 50 வகையான உணவுகள் நிறைந்திருக்கும். சூப், பிரியாணி, நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சிக்கன், மட்டன், ரொட்டி வகைகள், கிரேவி, இனிப்பு வகைகள் போன்ற பல்வேறு உணவுகள் அதில் இடம் பெற்றிருக்கும்.

அதனை 3 லிருந்து 4 பேர் வரை திருப்தியாக சாப்பிடும் அளவிற்கு தாராளமாகவே இருக்கும். அதனின் மொத்தவிலை மற்றும் ஜிஎஸ்டியும் சேர்த்து வெறும் 2100 மட்டுமே. இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட தயாராகுங்கள்.

Also read: மன மணக்கும் காரப்பொடி மீன் குழம்பு.. இதில் இவ்வளவு நன்மைகளா?