வீடு முழுக்க கொசு தொல்லையா?..கொசுக்களை ஒழிக்க ஆரோக்கிய வழிகள்.

பொதுவாக கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசு வத்தி சுருள், கொசுவத்தி லிக்கியூடை பயன்படுத்துகிறோம். இவை இரண்டும் கொசுவிற்கு எந்த அளவிற்கு ஊறு விளைவிக்கிறதோ அதே அளவுக்கு பாதிப்பை மனிதருக்கும் ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை இவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்களையும் பாதிக்கிறது. மேலும் கொசுவினால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற கொடிய நோய்களை பரப்பபும் செய்கிறது. அதனால் இயற்கை வழியில் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று பார்ப்போம்.

ஒரு அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி அதில் காட்டன் துணியை போட்டு கட்டி கற்பூரத்தைப் தூளாக்கிப் போடவும். பிறகு கொசு அதிகம் வரும் இடங்களில் ஏற்றி வைக்கவும். வீட்டில் தேங்காய் நிறுவிய ஒரு கொட்டாங்குச்சியில் கம்ப்யூட்டர் சாம்ராணியை வைத்து, ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் ஏற்றி வைக்கும். பிறகு சாம்ராணி புகையின் மீது ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை புகைக்கு கொசுக்கள் ஓடிவிடும்.

ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை சம அளவு கலந்து விளக்கு ஏற்றி வைக்கலாம். வேப்ப எண்ணையின் வாசனை கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. இதனை கை, கால்களில் தேய்த்துக் கொள்ளலாம். கற்பூரங்களை வழக்கத்தை விட சற்று கூடுதலாக, அதாவது கால் மணி நேரம் வரை எரிய விட்டால் கொசுக்கள் அண்டாது. கற்பூரத்தை தூளாக்கி அதனுடன் எண்ணையை கலந்து அறையில் தெளிக்கலாம்.

Also read: அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்? அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்..

தெளிப்பானாகவும் பயன்படுத்தலாம். கொசுக்கள் ஓடோடிவிடும். கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்து கலந்து கொண்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஓடிப்போகும். எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை அவற்றை நெருங்கவிடாமல் செய்யவும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கற்பூரத்தை மிதக்க விடவும். இதன் வாசனை கொசுக்களை விரட்டும். வீட்டின் உள்ளே ஜன்னல் ஓரங்களிலும் துளசிச் செடியை வளர்க்கலாம். துளசிச் செடிக்கு கொசுக்களை விரட்டும் ஆற்றல் உண்டு. நொச்சி இலை ஒரு சிறந்த கொசுவிரட்டி. நொச்சி இலையை வீட்டின் அறைகளில் ஓரமாக பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நிலையை மாற்ற வேண்டும்.