புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள்.. சென்னைக்கு வரப்போகும் ஆபத்து..

நாம் திரும்பும் பக்கம் எல்லாம் இப்போது கிளைமேட் சேஞ்ச், குளோபல் வார்மிங் போன்ற பல விஷயங்களைப் பற்றி கேட்க முடிகிறது. அதாவது உலகம் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புயல், வெள்ளம் சுனாமி, நிலநடுக்கம் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும் புவி வெப்பம் அடைவதால் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும் அபாயமும் இருக்கிறது. அதோடு சென்னை, மும்பை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்படி பலரையும் நடுங்க வைக்கும் அந்த புவி வெப்பமடைதல் என்றால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் அதிகரிப்பதால் பூமி இயல்பு நிலைக்கு எதிராக வெப்பமடைவதை தான் புவி வெப்பமடைதல் என்று கூறுகிறோம்.

கடந்த நூறு ஆண்டுகளை வைத்து பார்க்கும் போது பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி ஆக இருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் காரணத்தால் பூமி அதிக அளவு வெப்பமடைகிறது.

இதன் மூலம் நமக்கு பல பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உலகம் இப்படி ஒரு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் இதை விரைந்து தடுக்க வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் உணர வேண்டும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஐநா காலநிலை மாநாட்டில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதாவது பூமி வெப்பம் அடைவதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் இதை கட்டுப்படுத்துவதற்காக ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26 ஆவது காலநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் கைவிடுவது பற்றிய விஷயங்களும் விவாதிக்கப்பட்டது. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக கைவிடுவது தான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் புவியின் வெப்பநிலை உயர்வை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தவில்லை எனில் பல பாதிப்புகளை நாம் சந்திக்கும் அபாயமும் இருக்கிறது. மேலும் புவி வெப்பமடைதல் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனால் காடுகள் அழிவதை தடுத்தல், மீத்தேன் மூலம் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்துதல், பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழித்தல் போன்ற பல விஷயங்களை மேற்கொண்டால் மட்டுமே இந்த பிரச்சனையில் இருந்து நம்மால் வெளிவர முடியும். அது மட்டுமல்லாமல் மரம் வளர்ப்பதை நாம் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் காற்று மாசுபடுவதை நம்மால் தடுக்க முடியும். இதை நாம் ஒவ்வொருவரும் மேற்கொண்டால் நிச்சயம் பல அழிவுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். இது நம் வருங்கால தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.