முக்கிய அப்டேட்டை கொளுத்தி போட்ட லோகேஷ்.. எதிர்பார்ப்பை கூட்டிய தளபதி 67

விக்ரம் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கப் போவது அனைவருக்கும் தெரியும். பல மாதங்களாக இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்போது செமையான ஒரு செய்தி கிடைத்துள்ளது.

அதாவது தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அதில் இயக்குனர் மிஷ்கின் உட்பட சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. ஆனாலும் அது குறித்த போட்டோக்கள் எதுவும் இதுவரை மீடியாவில் வெளிவரவில்லை.

இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் செம அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட அவர் ரசிகர்களின் கேள்விக்கு நாசுக்காக பதில் அளித்துள்ளார். அதன்படி வரும் பிப்ரவரி ஒன்று இரண்டு மூன்று ஆகிய தேதிகள் விஜய் ரசிகர்களுக்கு முக்கிய நாட்களாக மாற இருக்கிறது.

Also read: திரை உலகையே மிரள வைத்த ஆபாவாணன்.. ஊமை விழிகள் ஒரு சரித்திரம்

அதாவது பிப்ரவரி முதல் தேதி தளபதி 67 குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதற்கு அடுத்து இரண்டாம் தேதி படத்தின் பூஜை குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவர இருக்கிறது. அதைத் தொடர்ந்து மூன்றாம் தேதி படத்தின் அறிவிப்பு டீசர் ஒன்று பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது.

ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் போது வெளியான அறிவிப்பு டீசர் பயங்கர வைரலானது. தற்போது அதையே ஓவர் டேக் செய்யும் வகையில் தளபதி 67 டீசர் மாஸாக ரெடியாகி இருக்கிறதாம். மேலும் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக காஷ்மீரில் நடைபெற இருக்கிறது.

அதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து முக்கிய நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பங்கேற்க இருக்கின்றனர். இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் விரைவில் வர இருக்கும் டீசரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

Comments are closed.