திரை உலகையே மிரள வைத்த ஆபாவாணன்.. ஊமை விழிகள் ஒரு சரித்திரம்

தமிழ் சினிமாவின் பொற்காலமாக கருதப்படும் 70 மற்றும் 80 களில் பாக்யராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் ரசிகர்களை தங்கள் படைப்பால் வந்துள்ளனர். இவர்களின் திரைப்படங்கள் எல்லாம் காதல் சென்டிமென்ட் கிராமத்து வாழ்க்கை என்பதை மையப்படுத்தியே இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த காலத்தில் தொழில் நுட்ப ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வந்து கதை சொல்வதில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஒரு முயற்சியை கொடுத்த இயக்குனர் தான் ஆபாவாணன். இவருடைய வருகைக்கு பின்னர் தான் ஆர்கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் என்று திரைப்பட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் எளிதில் திரையுலகில் காலடி வைத்தனர்.

மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற இரு பெரும் ஜாம்பவான்களுக்கு இடையில் தாக்குப்பிடித்து ஒரு நடிகராக வெற்றி பெற்ற நடிகர் விஜயகாந்தை தன்னுடைய இந்த படைப்புக்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம் அவரை அடுத்த கட்ட பரிமாணத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் ஆபாவாணனுக்கு உண்டு.

Also read: பட வாய்ப்புக்காக புது ரூட்டை பிடித்த ஹீரோயின்.. உச்சகட்ட கவர்ச்சியால் ஸ்தம்பித்த திரையுலகம்

பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர் என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இதற்கெல்லாம் முன்பாக பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு பிள்ளையார் சுழி போட்டவரும் இவர்தான். இவ்வளவு பெருமையைக் கொண்ட இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஊமை விழிகள்.

திரைப்பட கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவர்களை வைத்து அவர் இயக்கிய இந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு பெரும் மாற்றத்தை கொடுத்தது. விஜய்காந்த், ஜெய்சங்கர், கார்த்திக், அருண் பாண்டியன், சந்திரசேகர், ஸ்ரீவித்யா, சசிகலா, சரிதா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.

இப்படத்தில் ரவிச்சந்திரன் நடித்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான். படம் எடுக்க முடிவு செய்யப்பட்ட போது இயக்குனர், ரவிச்சந்திரனை அணுகி அவரின் கேரக்டரைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவரோ கதை கேட்பதற்கு முன்பே நான் சினிமாவை விட்டு விலகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதனால் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

இருந்தாலும் கதையை ஒரு முறை கேட்டுப்பாருங்கள் என்று இயக்குனர் அவரிடம் கதையைக் கூறியிருக்கிறார். கதையை கேட்ட ரவிச்சந்திரன் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படி பல நிகழ்வுகளுக்கு பிறகு படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் கொண்டாட வைத்தது.

Also read: தனுஷ், நயன்தாரா வரிசையில் இடம் பிடித்த சந்தானம்.. ஆச்சரியத்தில் திரையுலகம்

அதிலும் “தோல்வி நிலையென நினைத்தால்” என்ற பாடல் அந்த காலத்தில் அனைத்து வீடுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்குமாம். இவ்வளவு சிறப்புகளை பெற்ற இந்த படம் அவ்வளவு சாதாரணமாக வெளியாகவில்லை. பட குழுவினர் இந்த படத்தை வெளியிடுவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளனர்.

அப்போது படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. திரையுலகில் பலரும் ஊமை விழிகள் படம் அவ்வளவுதான் என்று நினைத்தனர். ஆனாலும் மனம் தளராத இயக்குனர் டெல்லிக்கு சென்று ஒரு வழியாக சென்சார் சான்றிதழ் பெற்றார்.

மேலும் ஆகஸ்ட் 15 1986 படம் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் மிகப் பெரிய போஸ்டர் ஒன்றை அடித்து அதில் சென்சார் சான்றிதழ் வெளியிட்டு ஆகஸ்ட் 15 அன்று எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்று விளம்பரப்படுத்தி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தனர்.

அதன் பிறகு படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. க்ரைம் த்ரில்லராக உருவான இந்தப் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் இதே போன்ற கதையம்சம் கொண்ட பல திரைப்படங்கள் வெளி வந்தது. அந்த வகையில் ஊமை விழிகள் திரைப்படம் என்றும் ஒரு சரித்திரம்தான்.