தனுஷ், நயன்தாரா வரிசையில் இடம் பிடித்த சந்தானம்.. ஆச்சரியத்தில் திரையுலகம்

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் சந்தானம் வெள்ளி திரையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். விஜய், அஜித் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே காமெடி வாய்ப்புகளை மறுத்து வரும் சந்தானம் தோல்வி படங்களை கொடுத்தாலும் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஐபி ஏரியா என்று சொல்லக்கூடிய போயஸ் கார்டனில் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடு இருக்கிறது. அதை தொடர்ந்து நடிகர் தனுஷும் தன் முன்னாள் மாமனாரின் வீட்டுக்கு அருகிலேயே பல கோடி மதிப்புள்ள இடத்தை வாங்கி தற்போது அரண்மனை போன்ற வீட்டை கட்டி வருகிறார்.

அதேபோன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அங்கு பல கோடி செலவு செய்து வீட்டை கட்டி இருக்கிறார். இப்படி அந்த ஏரியாவில் அடுத்தடுத்த பிரபலங்கள் வீடுகளை வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தான் தற்போது சந்தானம் இணைந்திருக்கிறார். அங்கு ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது.

பல வருடங்களாகவே போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்று கனவு கண்டு வந்த சந்தானம் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் அவர் பல கோடி மதிப்புள்ள அந்த பிரம்மாண்ட வீட்டை தற்போது சொந்தமாக வாங்கி இருக்கிறார். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 25 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ரசிகர்கள் சந்தானத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்த தோல்வி திரைப்படங்களை கொடுத்த சந்தானம் எப்படி இவ்வளவு விலை கொடுத்து அந்த வீட்டை வாங்கினார் என்ற ஆச்சரியமும் தற்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.