சரும பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் இந்த சரும பிரச்சனை.

அதுவும் வெயில் காலங்களில் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு போன்ற பல பிரச்சினைகளால் நாம் அவதியுற்று வருகிறோம். அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரு எளிமையான குளியல் பொடி இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 100 கிராம்

கடலைப் பருப்பு – 100 கிராம்

ரோஜா இதழ்கள் – தேவையான அளவு

ஆவாரம்பூ – தேவையான அளவு

செய்முறை

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி கொள்ளவும்.

இந்தப் பொடியை நாம் குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக நாம் உடலில் தேய்த்து குளித்து வர சிறிது நாட்களிலேயே நீங்கள் நல்ல மாற்றத்தை காணலாம்.

இந்தப் பொடியை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கருவளையம் மற்றும் வெயிலினால் உண்டாகும் கருமை போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளிலிருந்தும் மிக எளிதாக விடுபட முடியும்.

பெண்கள் இந்தப் பொடியை உபயோகப்படுத்தும் போது சிறிது கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைந்த செலவு மற்றும் குறைவான நேரத்தில் இந்த குளியல் பொடியை நம்மால் தயாரித்துவிட முடியும். ஆவாரம்பூ என்பது பல கிராமங்களிலும் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய பொருள்.

சிலருக்கு அந்த பூ கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் இந்த பொடி கிடைக்கும். அதை வாங்கி இதில் கலந்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த குளியல் பொடியை நாம் குழந்தைகளுக்கு தினமும் பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு ஏற்படும் வியர்க்குரு அலர்ஜி போன்றவற்றில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும் மேலும் குழந்தைகளின் சருமமும் பளபளப்பாக மாறும்.

மாநிலமாக இருக்கும் குழந்தைகள் கூட இதனால் சற்று வெளுப்புடன் இருப்பார்கள். இதை பயன்படுத்தி பலனை அடையுங்கள்.

மருதாணி வைத்தவுடன் கைகள் சிவக்க வேண்டுமா?.. இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..