மருதாணி என்றால், அனைவருக்கும் பிடிக்கும். சிறியவர்களும் சரி பெரியவர்களும் சரி மருதாணி வைப்பதில் போட்டி வரும். யாருடைய கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று. அப்படி இருக்க, சிலருக்கு மட்டும் கைகள் நன்றாக சிவந்து இருக்கும். அதிலும் இலை மருதாணிஅரைத்தவர்களின் கைகள் நன்றாக சிவந்திருக்கும்.
அரைத்தவர்கள் கைகள் போன்று நமது கைகளையும் சிவக்க வைக்கலாம். இலை மருதாணியுடன் கொட்டை பாக்கை வைத்து அரைப்பது மிக நல்ல நிறத்தை கொடுக்கும்.
கடைகளில் விற்கும் மருதாணி வகைகளை வைத்தால், சிறிது நேரத்தில் காய்ந்துவிடும். அதனால், அதில் இருக்கும் பாதி நிறமே கைகளில் வந்து சேரும்.
முழுமையான நிறம் வர வேண்டுமென்றால், சிறிது காய்ந்தவுடனே தண்ணீர் அல்லது கரைந்த சர்க்கரை நீரை தெளித்து வர, மருதாணி காய்ந்து விடாமல் இருக்கும்.
இலை மருதாணியுடன் சிறிது புளி சேர்த்து அரைத்தெடுத்து பயன்படுத்தினால், நல்ல அடர் நிறத்தை பெறலாம்.
அதேபோல் நீலகிரி தைலம் கிடைத்தால், மருதாணி வைத்து கழுவிய பிறகு, அதன்மேல் தேய்த்து வர அன்றே நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
மருதாணி வைத்து கழுவியவுடன், ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். பிறகு தான் மெல்ல மெல்ல நிறம் மாறி அடர் குங்கும நிறத்திற்கு வரும்.
இப்போது செயற்கையாக நாம் கிடைக்கிறதே என்று வாங்கி வைக்கும் மருதாணி வகைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே தோல் உறிவது போல், காணாமல் போய்விடுகிறது.
அதேபோல், இப்போதெல்லாம் கடைத் தெருக்களில் கீரை விற்பது போல் மருதாணி கட்டுகளும் விற்படுகிறது. அதனால், விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்தது போல், வாங்கி பயன்படுத்தலாம்.
மருதாணி வெறும் அழகுக்காக மட்டுமல்ல, உண்மையில் அதில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. மருதாணி செடியின் இலை, வேர், பட்டை என அனைத்தும் பலவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பொடுகு பிரச்சனையால் தொல்லையா.. இயற்கையான முறையில் சூப்பர் டிப்ஸ்