சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் தான் அந்த நடிகை. ஆனால் அவருக்கு சினிமா வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. முதலில் சின்னத்திரையில் தன் நடிப்பை ஆரம்பித்த அந்த நடிகை பிறகு பெரிய திரைக்கு தாவினார். ஆனால் அங்கு அவருக்கு கிடைத்தது என்னவோ ஐட்டம் கதாபாத்திரங்கள் தான்.
அப்படி அவர் நடித்த ஒரு கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பிறகு அதே மாதிரி பலான கதாபாத்திரங்கள் தான் அவரை தேடி வர ஆரம்பித்தது. இதனால் நொந்து போன அந்த நடிகை தன்னை தேடி வந்த வாய்ப்புகள் அனைத்தையும் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.
Also read: தனுஷ், நயன்தாரா வரிசையில் இடம் பிடித்த சந்தானம்.. ஆச்சரியத்தில் திரையுலகம்
அதன் பிறகு அந்த பெரிய நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகைக்கு சின்னத்திரையின் முக்கிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது அதில் கவனம் செலுத்தி வரும் அந்த நடிகைக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
ஆனால் அது அனைத்தும் அந்த மாதிரி கேரக்டர்களாகவே இருந்திருக்கிறது. இதனால் அவர் எனக்கு சினிமாவே வேண்டாம் என்று ஒரேடியாக முழுக்கு போட்டு இருக்கிறார். மேலும் என்னை பார்த்தாலே இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் தான் கொடுக்கிறார்கள் என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் சொல்லி புலம்புகிறாராம்.
அதனால் அவர் வேறு வழியில்லாமல் சின்னத்திரையே போதும் என்று தஞ்சம் அடைந்திருக்கிறார். இங்கு அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைப்பதோடு மரியாதையும் கிடைக்கிறதாம். அதனால் சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக சினிமாவை வெறுத்து வருகிறாராம் அந்த நடிகை.
Also read: படு மிரட்டலாக வெளிவந்த ரஜினி பட டைட்டில்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்