படு மிரட்டலாக வெளிவந்த ரஜினி பட டைட்டில்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ரஜினி இதுவரை இல்லாத அளவுக்கு மிரட்டல் நடிப்பை கொடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று படம் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை இன்று காலை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் உட்பட பலரும் அந்த அறிவிப்பை காண்பதற்கு பயங்கர ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த காத்திருப்புக்கு பலனாக இப்போது தலைவர் 169 படத்தின் தலைப்பு படு மிரட்டலாக வெளியாகி இருக்கிறது. கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும்படி வெளியாகியிருக்கும் அந்த போட்டோவில் படத்தின் தலைப்பு ஜெயிலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த படத்தில் ரஜினி ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்த ஆக்சன் காட்சிகளும் படு மிரட்டலாக இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.