சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் லிச்சி பழம்.. மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

நாம் சாப்பிடக்கூடிய பழ வகைகளில் சில பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. அந்தப் பழங்களை ஒரு சில சீசனில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். அப்படி சீசனுக்கு மட்டுமே விளையும் பழங்களில் நமக்கு ஏராளமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றது.

அதில் கோடை காலத்தில் மட்டுமே விளையக்கூடிய ஏராளமான பழங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கோடையில் விளையக்கூடிய லிச்சி பழம் நமக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்கிறது. வட இந்தியாவில் அதிகமாக விளையக் கூடிய இந்தப் பழம் இப்போது தமிழ்நாட்டிலும் அதிக அளவில் கிடைக்கிறது.

பிங்க் நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும் இந்த பழம் மிகவும் சுவையாக இருக்கும். இந்தப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இப்போது காணலாம்.

இந்த பழத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருக்கிறது. இதனால் இதை சாப்பிடும் போது நமக்கு சுலபமாக செரிமானம் ஆகிவிடும். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் வயிறு பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த பழத்தை எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கலோரிகள் குறைகிறது. இதனால் எடையும் குறையும்.

மேலும் இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக மாறும் தன்மை கொண்டது. இதனால் இதை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு.

அத்துடன் இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் கண்புரை ஏற்படுவதை தடுத்து கண்களின் பாதுகாப்புக்கு உதவும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.

இதில் விட்டமின் சி இருப்பதால் உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து இரத்த சோகை வரும் வாய்ப்பை குறைக்கும்.

இன்னும் இது போன்று பல நன்மைகளைத் தரும் லிச்சி பழம் தற்போது தென்னிந்தியா மார்க்கெட்டுகளில் அதிகம் கிடைக்கிறது. ஆதலால் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை நாம் மிஸ் பண்ணாமல் வாங்கி உண்ண வேண்டும். இதன் மூலம் உடலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.