வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரமாகும் அது ஒரு சிறப்பான பானம் இந்த தண்ணீர் தாகத்தை தணிப்பது மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உதவுகிறது.

அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நம்மில் பலரும் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதற்கு இந்த தண்ணீர் மிகச்சிறந்த தீர்வை கொடுக்கக் கூடியது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. இதற்கு பெயர் தண்ணீர் தெரபி. இது நம் உடலை அதிக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

பொதுவாக உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் சூடான தண்ணீரை குடிக்க வேண்டும். இதன் மூலம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரையும். அதேபோன்று நாம் சாப்பிடுவதற்கு முன்பும் சிறிது வெந்நீர் குடித்தால் அது நம் ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுகிறது.

மலச்சிக்கல் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வெந்நீர் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதனால் காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வெந்நீர் குடிப்பதன் மூலம் நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வியர்வையின் மூலமாக வெளியேறி விடுகிறது. இதனால் நம்முடைய உடல் சுத்தமாவதுடன், பளபளப்பாகவும் இருக்கும்.

இது தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது எப்படி என்றால் வெந்நீர் குடிப்பதன் மூலம் தலையில் உள்ள பொடுகு கட்டுக்கள் வரும். ரத்த ஓட்டமும் சீராகும், இதனால் முடி உதிர்வு ஏற்படாது.

மேலும் இரவில் நாம் தூங்குவதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடித்தால் புளித்த ஏப்பம், வாயு தொல்லை போன்றவற்றில் இருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும்.

சிலருக்கு தலைவலியினால் அதிக சோர்வு ஏற்படும். அப்படி இருக்கும் சமயத்தில் அவர்கள் சிறிது சிறிதாக தண்ணீரை குடித்து வர வேண்டும். இதன் மூலம் உடலில் நீர் சத்து அதிகரித்து தலைவலி குறையும்.

அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த தண்ணீர் மிகுந்த உதவியாக இருக்கிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வர அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.