நன்மைகள் நிறைந்த கோவைக்காய்.. இதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

கிராமப்புறங்களில் சாலை ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கும் கோவைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. கோவைக்காயின் முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.

உணவிற்கும் மருத்துவத்திற்கும் பயனுள்ள மூலிகையாக கோவை விளங்குகின்றது. தாய்ப்பால் பற்றாத இளம் தாய்மார்கள் கோவைக்காய் உண்ண பால் சுரக்கச் செய்யும். கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல், நோய்களும் மேற்பூச்சு மருந்தாகிறது.

தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக உன்னதமான மருந்தாக கோவை இலை உபயோகப்படுகிறது. கோவையின் பழங்கள், இலைகள், வேர்கள் அனைத்தும் சர்க்கரை நோயைத் தணிக்கும் தன்மையுடையது. கோவை இலைச்சாற்றை விஷக்கடிகளுக்கு போடலாம் என்றும் கோவை இலை உஷ்ணத்தையும், வியர்வையும் உண்டாக்கும் தன்மையுடையது.

அதுமட்டுமின்றி, ஆறாப்புண்க்கள், சொறி, சிரங்கு, இருமல் இவற்றைப் போக்கும் என்றும், சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. கோவை இலை மற்றும் காய் நாக்குப் புண்கள், பேதி போன்ற நோய்களையும் குணப்படுத்த வல்லது. கோவையின் பூக்கள், மஞ்சள் காமாலை நோய்க்கு மகத்தான மருந்தாகிறது. கோவை நுரையீரல் கோளாறுகளையும், சுவாசப் பாதைச் சளியையும் போக்க பயன்படுத்துகின்றனர்.

இலை, பழங்கள், காய்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுத்தப் படுகின்றது. கோவைக்காயை வாயிலிட்டு மென்று உண்பதால் வாய்ப்புண் விரைவில் ஆறும். நாக்கு அச்சரம் அகலும், பற்களில் இருந்து ரத்தம் கசிதல், சீழ்படிப்பில், பல் கூச்சம், பல் ஆட்டம் ஆகியனவும் குணமாகும். ஓர் அற்புதமான ‘ஆன்டிபயாட்டிக்’ என்று சொல்லப்படும் நோய் போக்கு ஆகும்.

சில கோவை இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து நாள்பட்ட ஆறாத புண்கள், நீர் வடிந்துவிடும் நமைச்சலுடன் நாற்றம் வீசும் புண்கள் ஆகியனவும் ஆறும் விதத்தில் அவற்றைக் கழுவி வர விரைவில் ஆறிவிடும். கோவை இலையை மைய அரைத்து அதனோடு வெண்ணை சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், தோல் நோய்கள் ஆகியவற்றின் மேல் பூச விரைவில் ஆறிவிடும்.