ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? அப்போ இத யூஸ் பண்ணுங்க..

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இதுவும் ஒரு பிரச்சினைதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரைப் பார்த்தாலும் கண்களில் கருவளையம் இருக்கிறது.

எதனால் கருவளையம் வருகிறது என்றால் சிலருக்கு அதிக நேரம் படிப்பதால், அதிக மன அழுத்தம் ஏற்படுவதால், சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால், அதிக நேரம் டிவி பார்ப்பதால், லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்வதால், அதில் மிகவும் முக்கியமான ஒன்று மொபைல்போன் அதிகநேரம் உபயோகிப்பதனால் கருவளையம் வர நேரிடும்.

இன்னும் சிலருக்கு உடலில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் கருவளையம் வரக்கூடும். அதுவும் இன்றைய கால சிறுவர்கள், இளைஞர்கள் யாரும் முறையான உணவை உட்கொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் வீட்டு உணவை தவிர்த்துவிட்டு இப்போது கடையில் மட்டுமே அவர்களுக்கான ருசியான உணவை தேடுகின்றனர்.

அதுவே அவர்கள் உடம்பில் அதிக பிரச்சினையை வரத் தூண்டும். முறையாக தண்ணீர் குடித்தாலே நம் உடலில் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்வடையும். ஆனால் நாம் யாரும் அதைப் பின்பற்றுவதில்லை.

Also read : சரும பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

மேல் கூறியவற்றை உன்னிப்பாக கவனித்து அதை சரியான வழியில் அனைவரும் பின்பற்றினாலே போதும் கருவளையம் வர நேரிடாது. ஆனால் கருவளையம் வந்தவுடன் யாரும் இதையெல்லாம் யோசிப்பதில்லை. உடனே கடையில் சென்று அங்குள்ள க்ரீமை பயன்படுத்துகிறோம். அதனால் முகத்தில் க்ரீம் பயன்படுத்துவதற்கு முன்பு இல்லாத பல பிரச்சனைகள் எல்லாம் வருகிறது .

எதற்காக முகத்தில் இல்லாத பிரச்சனை எல்லாம் நாம் கொண்டு வரவேண்டும். வீட்டில் சமயலறையில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நாம் செய்து கொள்ளலாமே. எப்படி வீட்டிலிருந்தே கருவளையத்தைப் போக்குவது என்று நாம் பார்ப்போம்.

உருளைக் கிழங்கை நறுக்கிய பின் வரும் சாறை எடுத்து கண்களின் கீழ்ப்பகுதியில் தடவவேண்டும். பின்னர் அதை 30 நிமிடங்கள் காய வைத்த பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினந்தோறும் செய்து வந்தால் கண்கள் குளிர்ச்சி அடைந்து கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய கூடும். இதை வீட்டில் தினமும் செய்து வாருங்கள் உங்களுக்கே சில நாட்களில் அதன் முன்னேற்றத்தை கண்கூடாகப் பார்க்க முடியும்.

முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ்