வரலாறு

இந்த ஐடியா நமக்கு தோனாமா போச்சே! வாழ்வை விற்று ஜாலியாக கல்லா கட்டும் நபர்!

நாம் நம் வாழ்நாளில் எவற்றையெல்லாம் விற்போம் என்று யோசித்தால், பெரும்பாலும் பொருட்களும், நம் உழைப்பும் தான் என்ற பதில் கிட்டும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாம் வளரக்கும் கால்நடைகளை கூறுவோம். அதனினும் அதிகபட்சமாக நமது உடல் பாகங்கள் என்ற பதிலும் சில சமயங்களில் எட்டிப்பார்க்கும்.

ஆனால், இங்கே ஒருவர் தனது வாழ்வை வித்தியாசமான முறையில் விற்பனை செய்திருக்கிறார். விந்தையாக இருக்கிறதா? அதான் உண்மை. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக அவரை அவரே இணையதளத்தில் விற்றுள்ளார்.

ஆம், அதுவும் அவரை ஒரே ஒருவர் மட்டும் வாங்கவில்லை. பலர் இணைந்து அந்த ஒரு நபரை வாங்கியுள்ளனர். அவர் தன்னை பங்குகளாக விற்றுள்ளார். தனது உடலை பங்குகளாக அவர் விற்கவில்லை. தனது வாழ்வியல் செயல்களை, பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பதுபோல் அவர் தன்னை பங்குகளாக விற்றுள்ளார்.

இதனால், இவரின் பங்குகளை வாங்கியவர்கள் இவரின் வாழ்வில் நடைபெறும் செயல்களில் தலையிடலாம், முடிவுகள் எடுக்கலாம். அதன்படி, இவரின் வாழ்வில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.

உதாரணமாக, புதிய வேலையில் இணைவது குறித்து இவர் கேள்வி எழுப்புகையில் பெரும்பான்மையான பங்கீட்டாளர்கள் வேண்டாம் என சொல்லிவிட்டதால் இவர் வேலைக்கு செல்லவில்லை. அதேபோல், திருமணம் குறித்து இவர் கேள்வி எழுப்புகையில், பெரும்பான்மையான பங்கீட்டாளர்கள் சம்மதம் தெரிவித்த பின்பே திருமணம் செய்தார்.

இது மட்டுமல்லாது, இவர் உடுத்தக்கூடிய உடைகளின் நிறங்களையும் பங்கீட்டாளர்கள் முடிவு செய்கின்றனர். இவ்வாறாகவே தனது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் விந்தையாகவே தெரிகிறார், மைக்.

ஆம், அவரின் பெயர் “மைக்”, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குதாரர்களை உடையவராக இவர் வலம வந்துகொண்டிருக்கிறார். அதோடு, பங்குதாரர்களின் சொல்லை செய்து காண்பித்து வருகிறார்.

இணையத்தில் இச்செய்தியை அறிந்த பலரும் தற்போது புலம்பி வருகின்றனர். இப்படி ஒரு சம்பாதிப்பு யோசனை நம்மிடம் இல்லாமல் போய்விட்டதே என்று தன்னை தானே வஞ்சித்து வருகின்றனர்.

எவ்வளவோ விந்தையான நிகழ்வுகள் நிகழும் இவ்வுலகில், இப்படியான நிகழ்வும் நிகழ்கிறதென்பது கூடுதல் விந்தையாக இருக்கிறது.