புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற தமிழ் மாதத்தில் நாம் அனைவரும் அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த மாதத்தின் அசைவ உணவுகளை தவிர்த்து விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வருமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளது. அந்த காரணத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி மாதம் தொடங்கியதும் நம் வீட்டில் பெரியவர்கள் அனைவரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அதற்கான காரணத்தை இதுவரை நாம் யாரும் அவர்களிடம் கேட்டிருக்க மாட்டோம். ஆனால் இப்போது இருக்கும் தலைமுறை பாத்தீங்கன்னா எதையும் கேள்வி கேட்கும் ஒரு தலைமுறை. அவர்களின் மனதில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கேள்வி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிட விரும்புபவர்களும் இந்த பதிவை பார்த்த பின் அவர்களும் கட்டாயமாக ஏற்றுக் கொள்வார்கள்.
முதலில் அறிவியல் காரணத்தை நாம் பார்ப்போம். பொதுவாக புரட்டாசி மாதத்தின் போது தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும் போது அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்க தன்னில் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும். இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பிவிடும் இது வெயில் காலத்தில் இருக்கும் சூடான நிலையைக் காட்டிலும் ரொம்ப மோசமான ஒரு சூடான நிலையை தரக்கூடியதாக இந்த புரட்டாசி மாதம் இருக்கும் .
இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல் சூடு மேலும் அதிகரிக்கும். அது நம் உடல் நலத்தினை பாதிக்கச் செய்யும். எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் என்றாள் தோல் சூடாகி விடும் அல்லது உலர்ந்து போய்விடும் அதிகமாக வியர்வை வரும், உடல் வெப்பநிலை கூட அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதயத்துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல் கூட அதிகரிக்கும்.
வயிறு மற்றும் ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதும் அசைவம் சாப்பிடும் போது நம் ஜீரணப் பிரச்சனைகள் ரொம்பவே எதிர் கொள்ள நேரிடும். அதனால் தான் அறிவியல் ரீதியாக புரட்டாசி மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.