ஏகே 61 பட தலைப்பு இதுதான்.. வெளிவர இருக்கும் அட்டகாசமான அப்டேட்

அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. அதனால் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் தலைப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் காத்திருப்புக்கு பலனாக இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது. பல தலைப்புகளை யோசித்து அலசி பார்த்த பட குழு தற்போது துணிவு என்ற தலைப்பை முடிவு செய்து இருக்கிறார்களாம்.

துணிவே துணை என்ற தலைப்பும் பரிசீலனையில் இருந்த நிலையில் இந்த இரண்டில் ஒன்றுதான் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளிவர இருக்கிறது. அந்த வகையில் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். பல மாதங்களாக இந்த படம் சம்பந்தமாக எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதுவே அஜித் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தி சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அஜித்தின் ரசிகர்கள் இந்த தகவலை ட்விட்டர் தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.