கண்டெய்னர்களில் உள்ள சரக்குகளை கையாளும் நூதன மோசடி கும்பல்..

கண்டெய்னர்களில் உள்ள சரக்குகளை கையாளும் நூதன மோசடி கும்பல்..

அதிரடி வேட்டையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஐபிஎஸ். சீல் செய்யப்பட்ட கண்டெய்னர்களில் சரக்குகள் காணாமல் போவது எப்படி?

தாம்பரம் வட்டாரத்தில் கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகள் பறி போவதாக பல கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க ரூபாய் ஐயாயிரம் மதிப்புள்ள ஷூக்கள் வெறும் ரூபாய் 500 தான் என்று கூவி கூவி விற்கும் கூட்டம் மறுபக்கம்.

நடந்தது என்ன என்று புரியாமல் போலீஸ் ஆய்வு மேற்கொண்டது. இறுதியாக போலீஸ் கமிஷனர் திரு அமல் ராஜ் ஐபிஎஸ் இடம் இச்செய்தி சென்றது.

விசாரித்ததில் பல ஆயிரங்கள் கொடுப்பதாக கூறி லாரி டிரைவர்களை பணத்தாசை கொண்டு மயக்கி அவர்களை எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் கண்டெய்னர்களை வழிமறித்து அதில் உள்ள சரக்குகளை சீல் பிரிக்காமல் போல்டுகளை கழட்டி சரக்குகளை கையாண்டு உள்ளனர்.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் வெளிநாட்டுக்கு செல்ல சுமார் இரண்டு மாதங்கள் ஆகும் .இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவற்றை பிரித்தால் பேப்பரில் உள்ள சரக்குகள் இருப்பதில்லை.

விலை உயர்ந்த பொருட்களை திருடி அவற்றை குறைந்த விலைக்கு விற்று லாபம் பார்க்கும் ஒரு கும்பல், அதேபோல் லாரி டிரைவர்களை மடக்கி சரக்குகளை கையாளும் ஒரு கும்பல், சரக்கை பாதுகாக்க ஒரு கும்பல் என்று பிரிவு பிரிவாக பல கும்பல்கள் வேலை பார்த்துள்ளது.

சுமார் பல லட்சம் பொருள்கள் இதுபோல் கையாளப்பட்டது என்பதை கண்டறிந்தனர்.

இனி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஜிபிஎஸ் மூலம் ஆராய வேண்டும் என்று கமிஷனர் கூறியுள்ளார்.