சினிமா புகைப்படம்

இணையத்தை கலக்கும் அஜித்தின் ஃபேமிலி போட்டோ.. அம்மாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் அனோஷ்கா

ajith

அஜித்தின் லேட்டஸ்ட் ஃபேமிலி ஃபோட்டோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அஜித் புது லுக்கில் இருக்கும் போட்டோ வைரலாகி வந்தது. அந்த வகையில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, அஜித் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை தயாரித்து இருந்த தயாநிதி தற்போது பல வருடங்களுக்கு பிறகு அஜித்தை மீண்டும் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த போட்டோவை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித்தை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதில் அஜித் மற்றும் ஷாலினி உடன் அவர்களுடைய மகள் அனோஷ்காவும் இருக்கிறார். சிறு குழந்தையாக பார்த்த அவர் தற்போது தன் அம்மாவை போன்றே அழகில் ஜொலிக்கிறார். அஜித்தின் மகள் இப்படி கிடுகிடுவென வளர்ந்துள்ளதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தயாநிதி அழகிரி, அஜித்தை வைத்து ஏதேனும் திரைப்படத்தை தயாரிக்க போகிறாரா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோன்று மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.