டிஆர்பி-யால் முடிவுக்கு வந்த முக்கிய சீரியல்.. விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் டிவி சீரியல்களை விட சன் டிவி சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது எனவே டிஆர்பியில் சன் டிவியின் பல சீரியல்கள் டாப் 10 இடத்தை பிடித்து வருகிறது. எனவே எப்படியாவது விஜய் டிவி தனது சீரியல்களை டாப் 10ல் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வரும் நிலையில் இதன் காரணத்தினால் புதிய சீரியல்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதற்காகத்தான் டிஆர்பியில் இடம் பிடிக்காத சீரியல்களை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறதாம் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அப்படி டிஆர்பியில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் முக்கியமான சீரியல்கள் தான் பாக்கியலட்சுமி மற்றும் பாரதி கண்ணம்மா. ஆனால் பாரதி கண்ணம்மா முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு கிடைக்கவில்லை.

டிஆர்பி யில் படு மோசமான நிலையில் இருந்து வருவதனால் இந்த சீரியலை நிறுத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம் எனவே அதற்கு பதிலாக பிரபல இயக்குனர் மற்றும் தளபதி விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது

அதோடு மட்டுமல்லாமல் அடுத்த மாதம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் துவங்க இருக்கிறது. எனவே பாரதி கண்ணம்மா 2 சீரியல் நிறைவடைய இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.