அறிவியல் ஆன்மீகம்

எந்த விரலால் விபூதி வைக்க வேண்டும்?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் பூசும் போது, அதை எப்படி எந்தெந்த விரல்களால் பூச வேண்டும் என்பதை அறிந்து செய்வதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அது குறித்த விபரங்களை நாம் பார்க்கலாம்.

கோயில் மட்டுமன்றி, வீட்டில் சாமி கும்பிடும்போதும் விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மைகளும் தீமையும் ஏற்படும். ஆகவே விபூதி எடுக்கும்போது கீழே குறிப்பிட்டுள்ள முறைகளில் பயன்படுத்தி மிகவும் கவனமாக அணிய வேண்டும்.

கட்டை விரலால் விபூதியை அணிந்தால் தீராத வியாதி வரும். ஆள்காட்டி விரலால் அணிந்தால் பொருட்கள் விரையம் ஏற்படும். நடு விரலால் அணிந்தால் நிம்மதியின்மை உருவாகும். மோதிர விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.

சுண்டு விரலால் அடைந்தால் கிரக தோஷம் ஏற்படும். மோதிர விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

வடதிசை அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்று கொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீற்றை எடுத்து அண்ணாந்து நின்று பூசிக்கொள்ள வேண்டும். மேலும் கீழே சிந்துவதோ, கொட்டுவதோ, சுவற்றில் தேய்ப்பதோ, தூண் சிற்பங்களில் தடவி விடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.