புரட்சித்தலைவி அம்மாவின் வேதா இல்லம்.

புரட்சித்தலைவி அம்மாவின் வேதா இல்லம்.

சென்னையில் புகழ்பெற்ற போயஸ் கார்டனில், 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை தான் இந்த வேதா இல்லம்.

புரட்சித்தலைவி பெரும்பாலும் தன் நேரங்களை கழித்தது இந்த இல்லத்தில் தான். அவர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் இருந்து இந்த இல்லத்தில் தான் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்.

அதே இல்லத்தில் தான் தன் சகோதரரின் திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பல பிரதமர்கள் , தேசிய தலைவர்கள் வரவேற்ற இடம் தான் வேதா இல்லம்.

பெரும்பாலும் புரட்சித்தலைவி அம்மா இந்த இல்லத்தின் வெளிப்புறத்தில் தான் பல அரசியல் தொடர்பான பேச்சுகளை பேசி உள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

அம்மாவின் பிறந்தநாளின் பொழுது, வாழ்த்து சொல்ல வரும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களை அனைவரும் கூடும் இடமாக திகழ்ந்துள்ளது.

அந்த வேதா இல்லத்தில் , தனக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பூஜை அறையில் தினமும் ஸ்லோகம் படிப்பாராம் மற்றும் வெஸ்டர்ன் மாடலில் அமைக்கப்பட்ட நூலகம் ஒன்று உள்ளது.

அவற்றில் சுமார் 8376 புத்தகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முதல் தளத்தில் தனக்கென அலுவலகம் அமைத்து அவற்றில் தனக்கு பிடித்த பறக்கும் குதிரை சின்னத்தை வைத்துள்ளார்.

அம்மாக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும் அவற்றில் மிகவும் செல்லமான ஜூலிக்கு என்று ஒரு புகைப்படம் அவ் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.