எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள்.

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள்.

வாழைத்தண்டு
வாழைத்தண்டை நறுக்கினால் உடனடியாக கருத்து போகும் அவை கருக்காமல் இருக்க வாழைத்தண்டை நறுக்கிய உடன் சிறிதளவு மோர் கலந்த தண்ணீரில் போடவும்.

கருவேப்பிலை
ஒரு சில நேரங்களில் கடைகளிலே கருவேப்பிலையே கிடைப்பதில்லை அதற்கு நாம் கருவேப்பிலை கிடைக்கும்போது அவற்றை வாங்கி வந்து நன்கு கழுவி இலைகளை உருவி தண்ணீர் இல்லாமல் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

தேங்காய்
அதேபோல் ஈரப்பதம் இல்லாத தேங்காய் எடுத்துக் கொண்டு அதை துருவி ஒரு டிபன் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை தேங்காய் பூ கெட்டுப் போகாமல் இருக்கும்.

சுண்டைக்காய்
சுண்டைக்காய் சாம்பார் வைப்பதற்கு சுண்டைக்காயை நன்கு கழுவிய பிறகு அவற்றை நசுக்கி , எண்ணெயில் வதக்கி சாம்பார் வைத்தால் சாம்பாரில் சுண்டைக்காய் கசப்பு தெரியாது . சுண்டைக்காய் சாம்பார் மணமாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்.