சர்க்கரை நோயால் பல பிரச்சனையா? சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ்.

சர்க்கரை நோயால் பல பிரச்சனையா?

சர்க்கரை நோய்க்கு ஒரு எளிய டிப்ஸ்.

பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவை தான், வெந்தயம் என்றாலே நம் உடல் சூட்டை தணிக்கும் ஒரு மகத்துவமான பொருள்.

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனையில், வரும் வயிறு வலிக்கு வெந்தயம் சாப்பிடு என்பார்கள். இத்தனை மகத்துவம் மிக்க வெந்தயத்தை கீரையாக செய்து சாப்பிடலாம்.

முளைகட்டிய வெந்தயம்(ஸ்ப்ரவுட் ) இல் அதிக பைபர் கண்டன்ட் இருப்பதாகவும் மற்றும் விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் கே, விட்டமின் பி ல் ஃபோலிக் ஆசிட் எனப்படும் சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவற்றை நாம் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாகவும் ,குளிர்ச்சியாகவும் மற்றும் ஜீரண சக்தி நிறைந்ததாகவும் இருக்கும்.

முக்கியமாக தினமும் ஒரு டீஸ்பூன் அளவு முளைகட்டி வெந்தயத்தை மூன்று வேலையும் உணவு சாப்பிடும் முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

சர்க்கரை நோய்க்கு வெந்தயத்தை ஸ்ப்ரவுட் ஆக செய்து சாப்பிட்டால் நாளடைவில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து , சுகர் பேலன்ஸ் பண்ணவும் உதவுவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.