மக்களே! வெளியே செல்லும்போது இதை கவனமாக பின்பற்றுங்கள்.

மக்களே! வெளியே செல்லும்போது இதை கவனமாக பின்பற்றுங்கள். போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் விதிக்கும் சட்டம்.

சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
அதோடு முக்கியமாக கவனிக்க வேண்டியது மோட்டார் வாகன சட்டம்.

அரசு விதித்த விதிகளை பின்பற்றுவது முக்கிய கடமையாகும்.

அமலில் உள்ள மோட்டார் வாகன சட்ட விதிகள் என்னவென்றால்?

1.இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
அத்துடன் பின் அமர்ந்தவர்களும் தலைக்கவசம்அணியவேண்டும் இல்லை என்றால் அபராதமாக ரூபாய் 500 லிருந்து ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

2.வாகன காப்பீடு அதாவது இன்சூரன்ஸ் ரினிவல் செய்யாவிட்டால் அபராதமாக ரூபாய் 4000 வசூலிக்கப்படும்.

3.பதிவு செய்யாத வாகனத்திற்கு ரூபாய் 5000 ஆகவும் ,ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்பவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் ஆகவும்.

4.மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும்கூட இருப்பவர்களுக்கும் அபராதமாக ரூபாய் பத்தாயிரம் வசூலிக்கப்படுகிறது.

5.செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரமும் , சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் ஆயிரமும், இருசக்கர வாகனத்தில் ட்ரிபிள் சென்றால் ரூபாய் ஆயிரமும்.

6.தேவையில்லாத இடங்களில் ஒலி எழுப்பினால் அபராதமாக ரூபாய் 2000 வசூலிக்கப்படுகிறது.

7. முக்கியமாக லைசன்ஸ் ரினிவல் செய்யாவிட்டால் அபராதமாக ரூபாய் 1000 வசதிக்கப்படும்.