என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

என்ன கருணைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? அனைவரும் ஒதுக்கும் கருணைக்கிழங்கை நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வகை கிழங்கு வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் வளம் தேவைப்படுவதில்லை.

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகமாக இவ்வகை கிழங்கை நாம் காணலாம்.இதில் உள்ள கால்சியம் ஆக்சிலேட் என்னும் ஒருவகை தாது பொருள் நாம் உண்ணும் போது நம் வாயில் மற்றும் கைகளில் அரிப்பை உண்டாக்குகின்றது. இவற்றை சரி செய்ய கிழங்கை அறுவடை செய்து, சில நாட்கள் கடந்து அவற்றை சமைத்து சாப்பிட்டால் இந்த அரிப்பு ,நமைச்சல் போன்ற தொல்லை இருக்காது.

இருப்பினும் கிழங்கை வேகவைக்கும் போது சிறிதளவு புலி சேர்த்து அல்லது எலுமிச்சை பழச் சாறு சேர்த்து வேக வைத்தால் அந்த நமைச்சல் இருக்காது.

கருணைக்கிழங்கில், பைபர் கண்டன்ட் அதிகம் உள்ளதால் உணவு செரிமானத்திற்கு சிறந்த உணவாக திகழ்கிறது. இவ்வகை கிழங்கை ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்துவர்.

கருணைக்கிழங்கின் நன்மைகள்

கருணைக்கிழங்கு நம் இதயத்திற்கு மிகவும் அவசியமானது.

நீண்ட நாட்கள் வாழ நமது உடலின் அனைத்து உறுப்புக்கும் ரத்தத்தை பாய செய்கின்றது .

கருணைக்கிழங்கு வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு மாரடைப்பு, இதய ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை ஏற்படாமல் நமக்கு நீண்ட ஆயுள் காலத்தை உண்டாகிறது.

மற்றும் கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும்.

இத்தகைய நற்குணங்களைக் கொண்ட கருணைக்கிழங்கை உணவில் கட்டாயம் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.