ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்

சினிமாவில் தற்போது டாப் ஹீரோயினாக வலம் வருபவர் தான் ப்ரியா பவானி ஷங்கர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஹாஸ்டல், குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை’ ஆகிய படங்களிலும், ‘டைம் என்ன பாஸ், விக்டிம்’ ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, அருள்நிதியின் ‘டிமான்ட்டி காலனி 2’ உட்பட நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.