உடம்பில் உள்ள சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம்.. வீட்டு மருத்துவம்

சாதாரண இருமலுடன் சளி வந்தால் விரைவில் வெளிவந்து சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி அறிகுறிகள் சரியாக தெரியவராது. அதையடுத்து, சளியின் நிறத்தைக் கொண்டு(பச்சை அல்லது மஞ்சள்) அதன் ஆரம்பம் குறித்து கணித்து விட முடியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நெஞ்சு சளியுடன், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்துவிடும்.

அதையடுத்து, இந்த சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம் என்று பார்க்கலாம். தேங்காய் எண்ணையுடன் கற்பூரம் சேர்த்து சூடு செய்து, அந்த எண்ணையை மிதமான சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். கற்பூரம் சேர்த்த தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் நாள்பட்ட நெஞ்சுச் சளியும் குணப்படுத்திவிடலாம்.

எலுமிச்சை சாறை சுடு நீரில் நன்கு கலக்கிய பின் தேன் சிறிது சேர்த்து கலக்கிக் குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத்தூளையும், மஞ்சளையும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும். நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.

புதினா இலை, மிளகு இவை இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் சம்மந்தமான கோளாறுகள் சரி ஆகும். பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக் கூடியவை. அதனால், இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை தவிர மற்ற பழங்களை சாப்பிடலாம்.

சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வொரு உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம். தோல் நீக்கிய இஞ்சி, காம்பு நீக்கிய வெற்றிலை, 10 துளசி இலை மற்றும் சிறிது மிளகு தூள் போன்றவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும் இறக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஆறவைத்து வடிகட்டி குடித்துவர உடம்பில் இருக்கும் சளி அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் படிங்க: அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்