பழி வாங்கிய ராதிகா.. பயத்தில் பாக்கியா.! பாக்கியலட்சுமி இன்றய சீரியல் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பாக்கியா வீட்டிற்காக கோபிக்கு தர வேண்டி இருந்த 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தது அசத்தியுள்ளார் எனவே இதனால் கோபி, ராதிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபி புலம்பி வருகிறார்.

இதனை அடுத்து இந்த வீட்டை பாக்யாவின் பெயரிலும் எழுதிக் கொடுத்த நிலையில் பிறகு எழில் பாக்யா பெயர் போட்ட பலகையை வீட்டிற்கு முன்பு வைக்க இதனைப் பார்த்த ராதிகா, கோபி அதிர்ச்சடைகின்றனர். எனவே இதனால் கோபி குடித்துவிட்டு வந்து நான் கஷ்டப்பட்டு கட்டின வீட்டை பணம் கொடுத்து வாங்கிட்டியா உனக்கு இருக்கு என சொல்லி புலம்ப பிறகு ராதிகாவின் வீட்டிற்கு சென்றவுடன் அங்கு ராதிகாவின் அம்மாவிடம் குடித்துவிட்டு உளறிக் கொண்டிருக்கிறார்.

இதனால் கடுப்பான ராதிகா காலையில் எழுந்தவுடன் கோபியை வச்சு செய்து விடுகிறார். கோபியும் விட்டா கழுத்தை நெரிச்சு கொன்னுடுவா போல என மனதிற்குள் நினைக்கிறார் இவ்வாறு ராதிகா இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஆபீஸிற்கு சென்று கேண்டினில் பிரச்சனை செய்கிறார்.

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கேண்டின் திறந்த புதுசுல என்னமோ பயங்கரமா வேலை பார்த்துகிட்டு இருந்தீங்க இப்ப என்ன திமிர் ஆயிடுச்சா. எப்படி வேணாலும் வேலை பார்க்கலாம் என்று நினைப்பு வந்துடுச்சா என ராதிகா கேட்க அதற்கு பாக்யா அப்படியெல்லாம் இல்ல மேடம் என சொல்கிறார்.

மேலும் ராதிகா வீட்ல இருந்து என்ன வெளில அனுப்புன ஆணவத்தில் ஆடுறீங்களா வீட்டு விஷயம் வேற ஆபீஸ் விஷயம் வேற என கூற அதற்கு பாக்யா நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்ல மேடம் என் வேலையை நான் சின்சியரா பார்த்துகிட்டு தான் இருக்கேன் என சொல்ல அதற்கு ராதிகா நீங்க சின்சியரா இருக்குற லட்சணம் தான் எனக்கு தெரியுது என கூறுகிறார்.

பிறகு கவனமாய் இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது இப்ப நீங்க வேலை செய்ற இந்த கேண்டின் எப்பொழுதுமே எல்லாம் உங்க கிட்ட இருக்காது எப்ப வேணாலும் உங்க கையை விட்டு போகலாம் எனக் கூற அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள். பிறகு அதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் பாக்கியலட்சுமி, என்ன திமிரு என்ன பேச்சு இதெல்லாம் எத்தனை நாளைக்கு பார்க்கலாம். என்ன வீட்டை விட்டு அனுப்பின மாதிரி உங்களையும் இந்த கேண்டின விட்டு அனுப்புவதற்கு ரொம்ப நாள் ஆகாது. என்ன நடக்கப்போவது என பார்த்துக்கிட்டே இருங்க என கூறி அதை இதையும் சொல்லி சண்டை போடுகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைபெற்றது.