தஞ்சாவூரை பார்வையிட வந்த சின்ன பழுவேட்டரையர்.. அமோக வரவேற்பு கொடுத்த ஆடியன்ஸ்.

அனைவரும் ஆவலாக காத்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. அதை ரசிகர்கள் மேளதாளத்தோடு வரவேற்று கொண்டாடினார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பங்கேற்று நடித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் சோழ மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் திரைப்படத்தை பார்க்க தஞ்சை மண்ணிற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் திரையரங்கில் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியது. “பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், தஞ்சை மண்ணுக்கும் என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கம். ராஜராஜசோழன் அவர்களுக்கும் என்னுடைய பேர் அன்புக்குரிய மரியாதையான வணக்கம் என்று அவரின் பேட்டியை தொடங்கினார்.

எனவே, “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை இந்த தஞ்சையின் மண்ணில் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறினார். அவர் சிறுவயதில் இதே தஞ்சை மண்ணில் 1973 மார்ச் 31ஆம் தேதி ராஜராஜ சோழனை நேரில் பார்த்தேன் என்றார். அப்போது ராஜ ராஜ சோழனை காண்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக வந்தேனோ அதே மகிழ்ச்சியோடு தான் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேட்டியாளர் ஒருவர் அவரின் கதாபாத்திரத்தை பற்றி கேட்டபோது, அதற்கு அவர் கூறியது “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய பாகம் தான் ஆனால் இவ்வளவு பெரிய புகழ்பெற்ற திரைப்படத்தில் சிறிய பாகமாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததை சோழ தேசத்தில் வந்து பார்க்கிறது தான் பெருமை என்றார்.

ஆனால் என்னுடைய கதாபாத்திரத்தை காண நான் இங்கு வரவில்லை. பொன்னியின் செல்வனை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை காண்பதற்காக தான் நான் வந்துள்ளேன் என்று கூறினார். பின்னர், அவர் கூறியது ஆண்களைவிட பெண்களே புத்திசாலி என்று அடிக்கடி கூறுவேன். அதற்கு ஏற்றவாறு முதல் ஷோவில் பெண்களும் அதிகமாக காணப்பட்டனர். அதற்குக் காரணம் கல்கிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளார் என்று அர்த்தம்.

70 வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நாவல், அதற்கு இன்றைக்கும் ஒரு பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது பெருமைக்குரியது. படத்தோடு முதல் வெற்றி கல்கியின் எழுத்துக்கள், மணிரத்தினத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இதுபோன்று திரைப்படத்தின் வெற்றிக்கு சொல்லிக்கொண்டே போகலாம் என்று கூறினார். இறுதியாக நல்ல சினிமாவை வரவேற்ப்போம் பொன்னியின் செல்வனை வெற்றி பெறச் செய்வோம் என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

Also read: சோழ சாம்ராஜ்யத்தின் பெருமை.. யார் இந்த பொன்னியின் செல்வன்.?