பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.. உச்சக்கட்ட மன அழுத்தத்தில் தவிக்கும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் அந்த இயக்குனர். பல கோடி பட்ஜெட்டில் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்பும். அந்த வகையில் இவர் பல முன்னணி ஹீரோக்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இப்படி திரையுலகில் ஏறுமுகத்தை சந்தித்து வந்த இந்த இயக்குனருக்கு தற்போது நேரமே சரியில்லை போல. திரும்பிய பக்கமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் அவர் தற்போது உச்ச கட்ட மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக எந்த திரைப்படங்களையும் இயக்காத அந்த இயக்குனர் கடந்த வருடம் தன்னுடைய மூத்த மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்த திருமண வாழ்வே தற்போது பெரும் சோகத்தில் இருக்கிறது.

அந்த இயக்குனரின் மருமகன் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த பிரச்சனை எப்படியாவது சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் அந்த இயக்குனரும் தன் மகளின் திருமண வரவேற்பை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டார்.

அதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்று வந்த நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இயக்குனரின் மகள் தன் கணவரை விவாகரத்து செய்யும் முடிவில் தீவிரமாக இருப்பதால் தான் வரவேற்பு நிறுத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

இப்படி மகளின் திருமண வாழ்வு பாதியிலேயே முடிந்து விடும் நிலையில் இருப்பதை எண்ணி தான் அந்த இயக்குனர் பரிதவித்து வருகிறாராம். தற்போது அவரைப் பற்றிதான் கோலிவுட்டில் மிகவும் பரிதாபமாக பேசப்பட்டு வருகிறது.

Also read: புளியங்கொம்பாக பிடித்த சிம்பு.. ஜோராக நடக்கும் திருமண ஏற்பாடு