தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டும் சமந்தா.. பக்காவாக போட்ட பிளான்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் இவர் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து தமிழில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். நயன்தாராவை விட அதிக பாராட்டுகளைப் பெற்ற சமந்தாவுக்கு தற்போது தமிழில் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனாலும் அவர் அந்தப் படங்கள் எதையும் கமிட் செய்யவில்லை.

என்னவென்றால் சமந்தாவுக்கு தற்போது ஹிந்தியில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. இதற்காக அவர் கிட்டத்தட்ட மூன்று கதைகளை கேட்டு ஓகே சொல்லி வைத்துள்ளார். அதனால் அவர் கூடிய விரைவில் மும்பையில் வீடு வாங்கி குடியேறவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும் அவருக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகிறது. இதனால் தற்போது மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா தமிழ் மொழிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். அதிலும் அவர் சில வருடங்களாகவே தமிழில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஹாலிவுட், பாலிவுட் என்று வாய்ப்புகள் குவிந்து வருவதால் ஒட்டுமொத்தமாக அவர் மும்பைக்கே சென்று விடுவது என்ற முடிவில் இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு தெலுங்கில் அதிக சம்பளம் கிடைப்பதால் அதிலும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெப்சீரிசில் நடிக்கவும் அவர் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். இப்படி எல்லா பக்கமும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் அவர் தமிழ் சினிமாவை மட்டும் ஓரம் கட்டுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also read: புடவையில் மனதை அள்ளும் ப்ரீத்தி