வரலாற்று சரித்திர திரைப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்களுக்கு நந்தினி யார் என்று தெரியும், படிக்காதவர்கள் இதை படியுங்கள்.
நந்தினி வீரபாண்டியனை கொன்றதற்காக சோழ பேரரசரை கொல்ல திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். நந்தினி ஏன் வீரபாண்டியனை ஆதித்த கரிகாலனிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்தாள், உண்மையில் நந்தினி யார்? என்பதை இப்போது பார்க்கலாம்.
சுந்தரசோழனின் தந்தை அருஞ்ஜெய சோழ தேவரின் சகோதரர் கண்டராதித்தர் ஒரு சிறந்த சிவபக்தராக இருந்ததால் அவர் அரசபதவியை விரும்பவில்லை. இதனால், தந்தை இறந்த பிறகு நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வந்தபோதும் அதை விரும்பாமல், தனது தம்பி சுந்தர சோழனுக்கு (பிரகாஷ்) விட்டு கொடுத்தார்.
கண்டராதித்தரும் அவரது மனைவி செம்பியன் மகாதேவியும் அவர்களது வளர்ப்பு மகனான மதுராந்தகத்தேவர் (ரகுமான்) நாட்டை ஆள்வடைவிட, சிறந்த சிவபக்தராகவே இருக்க வேண்டும் என நினைத்து அவரை சிவபக்தராகவே வளர்த்தனர். ஆனால், மதுராந்தகத்தேவருக்கு மன்னராக ஆசை வந்ததால், பழுவேட்டரையர்களுடன் இணைந்து சுந்தரசோழனுக்கு எதிராக பல சதி திட்டம் தீட்டினார்.
ஆழ்வார்கடியானின் (ஜெயராம்) தந்தை இவர் மிகப்பெரிய சிவபக்தராவார், இவர் ஆற்றங்கரையில் அனாதையாக கிடந்த பெண் குழந்தையை எடுத்து நந்தினி என பெயர் வைத்து வளர்ந்து வந்தார். செம்பியன் மாதேவிக்கு ஆழ்வார்கடியானின் தந்தைக்கும் நல்ல நட்பு உண்டு என்பதால், நந்தினி செம்பியன் மாதேவிக்கு பரீச்சியம் ஆனார்.
இதனால், செம்பியன் மாதேவி நந்தினியை அரண்மனைக்கு அழைத்து வளர்க்கிறாள். இதனால், ஆதித்த கரிகாலன்,குந்தவை, அருள்மொழிவர்மன், மதுராந்தர் என அனைவருடனும் சிறுவயது முதலே விளையாடுகிறாள் நந்தினி. பருவ வயது வந்ததும், கரிகாலனுடன் காதலாக ஏற்படுகிறது. இந்த காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட செம்பியன் மாதேவியை நந்தினியை அரண்மணையைவிட்டு பாண்டியநாட்டுக்கு அனுப்பிவிட்டாள்.
ஒரு கட்டத்தில் தான் பாண்டியவம்சத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொள்கிறார் நந்தினி. இந்த நேரத்தில் போர் வர பாண்டியர்கனை கொன்று குவிந்து வருகிறான் ஆதித்த கரிகாலன். அப்போது ஒரு ஓலை குடிசையில் வீரபாண்டியனுடன் நந்தினியை பார்த்து அதிர்ச்சி அடைந்த கரிகாலன் அந்த இடத்திலேயே வீரபாண்டியனுடைய கழுத்தை அறுத்து கொன்றுவிடுகிறான்.
இதனால், ஆத்திரம் அடைந்த நந்தினி சோழ வம்சத்து சாம்ராஜ்ஜியத்தை அழிக்க, தான் அரியணையேற வஞ்சகியாகி மாறுகிறாள். இதற்காக நல்ல திட்டத்தை போட்டு 75 வயது முதியவரான பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) திருமணம் செய்து கொண்டு நயவஞ்சக பாம்பை போல அரண்மனைக்குள் நுழைகிறாள் நந்தினி. இறுதியில் சோழ சாம்ராஜ்ஜியம் வீழ்ந்ததா? இல்லையா என்பதை படத்தையோ புத்தகத்தையோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.