ஆரோக்கியமான சுரைக்காய் தோசை செய்வது எப்படி?

சுரைக்காய் என்பது உடம்பில் கொழுப்பை குறைப்பதிலும், சிறுநீரகத்தை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. இவற்றைக் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளாகவே நாம் உண்ணுகின்றோம். இவற்றை தோசையாகவும் சமைத்து உண்ணலாம். அது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வோம்.

தேவையானவை

பச்சரிசி – ஒரு கப்
இட்லி அரிசி – ஒரு கப்
சுரைக்காய் – 1 ½ கப்
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறு துண்டு
வர மிளகாய் – காரத்திற்கு ஏற்ப.

செய்முறை

சுரைக்காயை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஊற வைத்த அரிசி, நறுக்கிய சுரைக்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்து குறைந்தது 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க விட வேண்டும். மாவு புளித்ததும் எடுத்து தோசை கல்லில் எண்ணெய் தடவி தோசையாக வார்க்கவும்.

விருப்பப்பட்டால் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை கலந்து தோசையாக ஊற்றினால் இன்னும் சுவையாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும். இதனால் மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதை தடை செய்கின்றது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், குடல் புண்ணை சரிசெய்யும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

Also read: அதிகமாக அரிசி உணவை சாப்பிடுபவரா நீங்கள்.? கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயங்கள்