நாம் அறியாத ஒன்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். இன்றைய தொகுப்பில், வரலாற்றிலும் சுவையிலும் தனக்கென ஓர் தனியிடம் பிடிக்கும் அரிசி தான் மூங்கில் அரிசி. புதைப்படிவ பதிவின்படி மூங்கில் அரிசியின் பிறப்பிடம் நமக்கு என்னவென்று தெரியுமா? தெரிந்தால் வியந்து போவீர்.
ஆம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றப்பட்டவை தான் இவ்வகை அரிசி. மூங்கில் பூவில் இருந்து எடுக்கப்படும் விதையே மூங்கில் அரிசி என்பர். மூங்கில் புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு அடி முதல் மூன்று அடி வரை உயரம் வளரக்கூடிய மூங்கில் மற்ற மரங்களை விட சற்று விசித்திரமான ஒன்று.
முள், முள் இல்லா மூங்கில் என இருவகை மூங்கில்கள் உள்ளன. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே சீன நாட்டில் கண்டறியப்பட்டவை தான் இந்த மூங்கில் மரம் இவை சீனாவில் ,முள் இல்லாத புல்லாக வளர்ந்துள்ளது. ஆனால் நம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான அசாம் ,ஆந்திர பிரதேஷ் ,மணிப்பூர் ,மேகாலயா ,மிசோரம், சிக்கிம் ,நாகாலாந்து மற்றும் மேற்கு வங்காளத்தில் மூங்கில் அதிகமாக காணப்படுவதாக தகவல் கூறப்படுகிறது.
மூங்கில் அரிசியின் பயன்கள்
மனிதனை தன் நிலையில் இருந்து ஆட்டிப்படைக்கும் சக்கரை நோயிலிருந்து விடுபட உதவுகிறது .இதய நோய் மற்றும் ரத்த கொதிப்பிலிருந்து காக்கிறது .மலச்சிக்கலை போகின்றது. உடல் எடையை குறைக்கின்றது.
விட்டமின் ஏ விட்டமின் ஈ விட்டமின் பி6 தைமின் கால்சியம், மெக்னீசியம் பொட்டாசியம் ஆகியவை எலும்பு, முட்டிகளை வலிமையாக்குகிறது.
சிறார் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் மூங்கில் பாயசம் செய்யலாம்.
மூங்கில் பாயசம் செய்வது எப்படி
தேவையான பொருள்
மூங்கில் அரிசி-1 கப்
முந்திரி – தேவையான அளவு
தண்ணீர் -3 கப்
வெள்ளம் -2 கப்,
முதல் தேங்காய் பால் -1கப்,
ஏலக்காய்- 2.
செய்முறை
1. ஆறு மணி நேரம் முன்பே மூங்கில் அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. இதன் பின் குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்த்து ஆறு விசில் வைக்கவும்.
3. 10 நிமிடத்திற்கு பிறகு அவற்றை நன்கு மசித்து வெள்ளம் ,ஏலக்காய், முந்திரி சேர்த்து கொதிக்க விடவும் .
4. கடைசியில் சுவை கூட்ட தேங்காய் பால் சேர்த்து பகிரவும்.
நீங்களும் இந்த தொகுப்புடன் சுவையும் சத்தும் நிறைந்த மூங்கில் பாயசம் செய்து பயனடையுங்கள்.
Also read: வில்லேஜ் ஸ்டைலில் காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி?