புளியங்கொம்பாக பிடித்த சிம்பு.. ஜோராக நடக்கும் திருமண ஏற்பாடு

திரையுலகை பொருத்தவரை வளர்ந்து வரும் நடிகர்கள் தனக்கென ஒரு இடத்தை பிடித்த உடன் திருமணம், குழந்தை என்று செட்டிலாகி விடுவார்கள். ஆனால் பல வருடங்களாக முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் சிம்பு இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.

ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை காதலித்த சிம்பு தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதில் டி ராஜேந்தரின் உறவினர் பெண்ணை கூட சிம்புவுக்கு பேசி முடிப்பதாக இருந்தது. ஆனால் சில தடங்கல்களால் அந்த பேச்சுவார்த்தையும் பாதியிலேயே நின்று போனது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் எப்போது அவருக்கு திருமணம் நடக்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணை பேசி முடித்து இருப்பதாக ஒரு தகவல் திரை உலகில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவம் படித்திருக்கும் அந்தப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் அவருடைய அப்பா பல தொழில்களை செய்யும் பிசினஸ்மேன் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் அந்தப் பெண் சிம்புவின் தீவிர ரசிகையாம். அதனாலேயே அவர் அடிக்கடி சிம்புவின் குடும்பத்தை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று பெரியோர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம். இதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று தட்டிக் கழித்து வந்த அவருக்கு இப்போது திருமண ஆசை வந்திருக்கிறது. அதனாலேயே விரைவில் அவரின் திருமணத்தை முடித்து விட டி ராஜேந்தர் ஏற்பாடுகளை மிக வேகமாக செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்த சிம்புவின் திருமண அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: இணையத்தை கலக்கும் அஜித்தின் ஃபேமிலி போட்டோ.. அம்மாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் அனோஷ்கா