தர்ம சங்கடம் தரும் வாய் துர்நாற்றம்.. தவிர்க்க வேண்டிய 10 எளிமையான வழிகள்

1) உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம்.

2) மவுத் வாஷ் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

3) வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம்.

4) அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் வாய் துர்நாற்றம் நீங்கும்.

5) வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

6) குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலும் வாய் நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுத்துவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7) காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

8) வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும் நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்து கொள்வதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அதோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9) அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10) சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக்கீரையை வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.