இந்த இரு செடிகளை போதும்!.. சுத்தமான காற்றை சுவாசிக்க…

சுத்தமான காற்றை சுவாசிக்க வீட்டைச் சுற்றிலும் சுத்தமான செடிகள் மற்றும் மரங்களை வளர்க்கவேண்டும். இடம் குறைவாக இருப்பவர்கள் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.

இதில் முக்கியமான இரண்டு செடிகளை தொட்டிகளில் வளர்த்தாலே காற்றின் தரத்தை உயர்த்துவதோடு, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வு தரவல்லது.

காற்று சுத்திகரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கை கொடுக்கும். காற்றில் எப்போதும் புத்துணர்ச்சி இருப்பதை உணரலாம்.

சமையலிலும், மருத்துவத்திலும் புதினாவின் பங்கு அனைவரும் அறிந்ததே. இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். மேலும் ஈ, எறும்புகள், எலிகள் போன்றவற்றின் தாக்கத்தையும் இது கட்டுப்படுத்தும்.