சமையல்

கோவக்காய் இப்படி சமைத்துக் கொடுங்கள்.. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.

கோவைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். வாரத்தில் இருமுறை கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய கோவைக்காய் – 3 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2கப் நறுக்கிய தக்காளி – 1/2 கப் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 5 ஸ்பூன்
கருவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

செய்முறை

அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும். பொன்னிறமான பின்னர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தக்காளி, உப்பு போன்றவற்றையும் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கியதும் கோவைக்காயை போட்டு வேகவைத்து இறக்கவும் சூப்பரான கோவைக்காய் பொரியல் ரெடி. இது எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது கல்லீரல் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.