கோடை காலம் வந்து விட்டதா?.. வெயிலை சமாளிக்க இந்த ஜூஸ்களை குடிங்க

சம்மர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கொளுத்தும் வெயில் தான். அதுவும் திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே அவதிப்படுவார்கள். இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் அதிக அளவு நீர்ச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சிலர் ஜூஸ் வகைகள் இதோ உங்களுக்காக

லெமன் ஜூஸ் – பொதுவாக எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை தரக்கூடியது என்பதை அனைவரும் அறிந்ததே. இதில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் கடும் வெயிலை சமாளிக்க இந்த லெமன் ஜூஸ் நமக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் இது யாவர்க்கும் எளிதில் கிடைக்கக்கூடிய பழமாகும்.

தர்பூசணி ஜூஸ் – மிகவும் மலிவாகக் கிடைக்கக்கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த பழத்தில் நமக்கு ஏராளமான நீர்ச்சத்து கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது நல்லது.

ப்ளூபெர்ரி ஜூஸ் – இந்தப் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கிறது. மேலும் இப்பழம் நம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகள் இந்தப் பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

வெள்ளரி ஜூஸ் – இந்த வெள்ளரி ஒரு பழ வகை என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதில் நமக்கு ஏராளமான சத்துகள் கிடைக்கிறது. நம்மை இளமையாக வைத்துக் கொள்வதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. இதை வெயில் காலத்தில் தினசரி உணவில் தயிருடன் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

க்ரீன் டீ – வெயில் நேரத்தில் டீ, காபி போன்றவற்றை அருந்துவதற்கு பதிலாக நாம் க்ரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம். நாளைக்கு இரண்டு முறை இதை எடுத்துக் கொண்டால் நம் உடலில் உள்ள செல்கள் பாதுகாப்பாக இருக்கும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் குணம் இதற்கு உண்டு.