குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்.. இனி கடைக்கு போக வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம்

ஐஸ்கிரீம் பிடிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ் கிரீம்கள் ஏராளமான வகைகள் இருக்கின்றன வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், மேங்கோ போன்ற பல வகைகளில் இந்த ஐஸ்கிரீம்கள் மிக சுலபமாக நமக்கு கிடைக்கிறது. ஆனால் அவற்றை நாம் வீட்டில் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த கோடைகாலத்தில் ஐஸ்  கிரீம் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த கடுமையான வெயில் காலத்தில் சில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நம் வயிறு குளுமையாக இருக்கும். தற்போது எங்கு திரும்பினாலும் அனைத்து கடைகளிலும் கலர் கலரா விதவிதமான ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் களும் கண்ணைக் கவர்கின்றன.

ஆனால் அது நம் உடலுக்கு நல்லதா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. அதனால் வீட்டிலேயே மிகவும் சுலபமான இந்த முறையை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதுவும் ஐஸ் கிரீம் என்றால் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டியதில்லை எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.

Also read: கோடை காலம் வந்து விட்டதா?.. வெயிலை சமாளிக்க இந்த ஜூஸ்களை குடிங்க

அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த ஐஸ்கிரீம் வாங்க நாம் இனி கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

ஸ்டிராபெர்ரி – 200 கிராம்
ப்ரஷ் க்ரீம் – ஒரு கப்
கண்டென்ஸ்டு மில்க் – அரை கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதற்கு பிறகு 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பௌலில் இந்த ப்ரஷ் கிரீமை சேர்த்து அதை நன்றாக பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.பின் அத்துடன் அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை சேர்க்கவும்.

அதனுடன் நமக்கு தேவையான அளவு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.இந்த கலவையை காற்று போகாத ஒரு கண்டெய்னரில் மாற்றி நன்றாக மூடி அதை ப்ரீசரில் 8 மணி நேரம் வைக்கவும்.இப்பொழுது குழந்தைகள் விரும்பும் சுவையான ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது.

இந்த ஐஸ்கிரீம் முறையை உங்கள் வீட்டில் நீங்களே செய்து பார்த்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து அசத்துங்கள்.

Also read: சிவப்பு நிற பழங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!.. இனிமே அதை வேண்டாம்னு சொல்லாதீங்க