3 நாளில் சூப்பர் ஸ்டார் செய்த சம்பவம்.. பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய ஜெயிலர்

கடந்த 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் நாளிலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த இப்படம் இப்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாரின் அலப்பறை தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதற்கு ஏற்றார் போல் அனிருத்தின் இசையும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் திரையில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்து வரும் ரசிகர்கள் படத்தை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். இதுவே படத்தின் வசூலுக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ஜெயிலர் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை நெருங்கி இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் இந்த வசூல் ஏறுமுகமாகவே இருந்தது. இது பல வெற்றி படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று நினைத்த வேலையில் தற்போது ஜெயிலர் 200 கோடியை தாண்டி மாஸ் காட்டி இருக்கிறது.

இதுதான் இப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. படம் பற்றி பல நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவி வந்தாலும் அதையெல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறது முத்துவேல் பாண்டியனின் அலப்பறை. அந்த வகையில் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கான சிறப்பான என்ட்ரியையும் தொடங்கி வைத்திருக்கிறார்.