தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய பழங்கள்.. மறந்தும் கூட இந்த தப்பா செஞ்சுடாதீங்க

துரித உணவுகளை அதிகமாக விரும்பும் இந்த காலகட்டத்தில் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாலே இன்றைய தலைமுறை கோபப்படுகின்றனர். அந்த அளவுக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தான் அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

ஆனால் சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும் பழ வகைகளை நாம் எடுத்துக் கொள்வது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு உதவும். அதில் பொதுவாக பலரும் பழங்களின் தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிடுவார்கள். அது சில பழங்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படி தோலுடன் சாப்பிட கூடிய பழங்களையும் அதன் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.

பிளம்ஸ்: இந்தப் பழத்தை தோலுடன் சாப்பிடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் நம் தோலின் கருமை நிறத்தை நீக்கி பள பளவென்று வைத்துக்கொள்ள இது உதவும். அதே போல் மலச்சிக்கலை நீக்குவதற்கும் உதவும்.

பேரிக்காய்: பொதுவாக இந்த பழத்தின் தோல் கொஞ்சம் கசப்பு தன்மையுடையதாக இருக்கும். அதனாலேயே பலரும் இதை விரும்புவதில்லை. ஆனால் இப்பழத்தை தோலுடன் சாப்பிடுவதன் மூலம் நம் குடல் சுத்தம் செய்யப்படுகிறது. அதே போன்று இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் தீரும்.

கிவி: இந்த பழத்தை பலரும் தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால் தோலுடன் இப்ப பழம் சாப்பிடக்கூடியது தான் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் இப்பழத்தை தோலுடன் சாப்பிடுவதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆப்பிள்: பெரும்பாலானோர் ஆப்பிள் சாப்பிடும் போது தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால் தோலுடன் சாப்பிடும் போது புற்றுநோய்க்கான அபாயத்தை இது குறைகிறது. மேலும் உடலுக்கு தேவையான உடனடி எனர்ஜியையும் இந்த ஆப்பிள் கொடுக்கும்.

சப்போட்டா: இதில் விட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதனால் இதன் தோலை நீக்காமல் நன்றாக சுத்தம் செய்துவிட்டு நாம் சாப்பிடலாம். இது நம் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு வயிறு பிரச்சினையையும் சரி செய்யும்.

இவ்வாறாக இந்த பழங்களை நாம் தோலுடன் உண்பதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதனால் தோலுடன் எப்படி சாப்பிடுவது என்று யோசிக்காமல் முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

Also read: உடலுக்கு மருந்தாகும் வாழைப்பூ.. பலரும் அறியாத மருத்துவ பயன்கள்