தக்காளியே இல்லாமல் சட்னி செய்யணுமா.? இத ட்ரை பண்ணி பாருங்க

திடீரென தக்காளி விலை உயர்ந்தது இல்லத்தரசிகளுக்கு பெரும்பாடாக தான் இருக்கிறது. இதனால் தக்காளியை அதிகமாக உபயோகித்து சமைக்கும் பெண்கள் தான் பெரும் கஷ்டத்தில் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக தக்காளியே இல்லாமல் ஒரு சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்: ஒரு கப்

கடலைப்பருப்பு: 2 ஸ்பூன்

வர மிளகாய்: 5

புளி: சிறிதளவு

உப்பு: தேவையான அளவு

நல்லெண்ணெய்: தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை

செய்முறை:

அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதில் கடலை பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடவும்.

அதனுடன் வர மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த சட்னியில் சேர்க்க வேண்டும்.

இப்போது சுவையான வெங்காய சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்திற்கும் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Also read: கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.